இந்திய நாடாளுமன்றம் துவங்கி அறுபதாண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி அது மிகவும்
படாடோபமாக விழாக்கள் கொண்டாடுவதை விட, அதன் செயல்பாடுகள் குறித்து மிகவும் ஆழமாகப்
பரிசீலிப்பது அவசியம். தெற்கு ஆசியாவில் உள்ள நம் அண் டை நாடுகளில் சில, ராணுவ
சதிகள் அல்லது வன்முறை எழுச்சிகளுக்கு ஆளாகியிருக் கக்கூடிய அதே சமயத்தில், நாம்
தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் பய ணித்துக் கொண்டிருப்பது நம்
மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் தான்.
ஆயினும், ஸ்திரத்தன் மை மட்டும் பெரிய அளவிற்கு மதிப்பைத் தந்து விடாது. கடந்த
அறுபதாண்டு கால வரலாற்றில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடை பெற்ற விவாதங்கள்
மக்களின் அபிலாசைகளை வெளிப் படுத்தினவா, நாடாளுமன்றத் தின் சட்டமியற்றும் அதிகாரங்
கள் மூலம் சுதந்திரமான, நேர் மையான மற்றும் பெரும்பான் மை மக்களுக்கு நியாயம்
அளிக்கக்கூடிய விதத்தில் சட்டங்கள் உருவாக்கப்பட் டிருக்கின்றனவா என்பதை நமக்கு
நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு அலசி ஆராய்ந்து பார்த்தோமானால், அது மன
திற்கு முழுமையாக மகிழ்ச்சி யை அளிக்கக்கூடிய விதத் தில் இல்லை. கடந்த அறுப
தாண்டுகளில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற்றிருப் பது என்பவை மிகவும் குறைவு தான்.
மாறாக, அற்பத்தனமான பிரச்சனைகளுக்காகவெல்லாம் நாடாளுமன்றத்தைச் செயல் படவிடாமல்
சீர்குலைத்ததும், முழக்கங்கள் இட்டதும் அதிக மாகும். மூர்க்கத்தனமான ஒரு சிலர்
ஒட்டுமொத்த அவை யை செயலற்றதாக மாற்றி இருக்கின்றனர்.
உதாரணமாக, மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவை எடுத்துக்கொள் ளலாம். கடந்த பல
ஆண்டு களாகவே இரு அவைகளி லும், பெரும்பான்மை நாடாளு மன்ற உறுப்பினர்கள் இச்சட்ட
முடிவிற்கு ஆதரவாக இருந்த போதிலும், விரல்விட்டு எண் ணக்கூடிய ஒருசிலரால், இச்
சட்டமுன்வடிவை நிறை வேற்ற விடாமல் நிறுத்தி வைக்க முடிந்திருக்கிறது. மக்
களவையிலும், அதேபோன்று மாநிலங்களவையிலும் கடு மையாகக் கத்தித் தலையிட் டதன்
மூலமாகவும், ஆர்ப்பாட் டங்கள் செய்ததன் மூலமாக வும் அவைகள் நடத்தப்பட முடியாமல்
ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. அறுபதாண்டுகள் ஆன பின்னரும், பதினைந்து
பொதுத்தேர்தல்களைச் சந் தித்தபின்னரும், இந்திய நாடா ளுமன்றத்தில் மக்களின் உண்
மையான பிரதிநிதிகளைத் தான் இடம் பெறச் செய்திருக் கிறோமா என்பது சந்தேகமே. பெண்கள்
மற்றும் முஸ்லீம்கள் மிகவும் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவப்பட்டிருக்
கிறார்கள். தலித்துகள், பழங் குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடுகள் மூலமா கவும்,
பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் பல இடங்களில் அர சியல் ரீதியாக ஒருங்கிணைந்
திருப்பதன் மூலமாகவும் பல் வேறு சமூகப் பிரிவினரும் நாடாளுமன்ற உறுப்பினர் களாக
வந்திருக்கின்றனர் என்றாலும், இன்றைக்கும்கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும்
பணக்காரர் கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பது தொடர்கிறது. தேர்தல்களில்
போட்டியிடு வதற்கான செலவுகள் பல்கிப் பெருகியிருக்கக்கூடிய சூழ் நிலையில், பெரும்
வர்த்த கர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள், பெரும் தொழில்
அதிபர்கள் நாடாளு மன்றத்திற்குள் நுழைவதென் பது அதிகரித்துக் கொண்டிருக் கிறது.
இவர்களுடன் சில தொழிற்சங்கத் தலைவர்களும் இருக்கிறார்கள். இவர்களால் விவாதங்கள்
சற்றே அர்த்த முள்ளவைகளாக மாறியிருக் கின்றன என்பது உண்மை தான்.
நம் அரசியலமைப்புச் சட் டம் நிறைவேற்றப்பட்டதிலி ருந்து, இந்தியா ஒரு பல கட்சி
அமைப்புமுறையை நோக்கி தீர்மானகரமான முறையில் முன்னேறிக் கொண்டிருக் கிறது. கட்சித்
தாவல் சட்டம் போன்றவை குதிரை பேரத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது
என்ற போதி லும், நாட்டில் அதிகாரம் என் பது இன்றைக்கும் ஒருசிலர் கையில்தான்
குவிக்கப் பட்டி ருக்கிறது. இந்திய மக்கள் தங் கள் எதிர்காலத்தைத் தீர்மா
னிக்கக்கூடிய எஜமானர் களாக மாறக்கூடிய விதத்தில் நாட்டின் அரசியல் நடை முறைப்
பணிகளில் ஆக்கபூர் வமான பங்களிப்பினை அளித் திட வேண்டியது அவசிய மாகும்.
அறுபதாண்டுகள் ஓடி விட்டன. உண்மையான மக் கள் பிரதிநிதிகளை உருவாக் கும் பணி
இப்போதாவது அக் கறை யுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்
.நன்றி: The Hindu dated 15-05-12