லண்டன், ஆக.4-
லண்டன் ஒலிம்பிக் பேட்மின்ட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு வெண்கலப் பதக் கம் கிடைத்தது.ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வின் நம்பிக்கை நட்சத்திரமாக சென்ற சாய்னா நேவால், ஒற்றையர் போட்டி யில் அரையிறுதி வரைக் கும் முன்னேறி னார். உலகின் முதல் நிலை வீராங் கனையான சீனாவின் வாங் யிகானிடம் போராடித் தோல்வியைத் தழுவினார்.
ஆனாலும், வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத் தில் உலகின் இரண்டாம் நிலை சீன வீராங்கனை வாங் ஜின்னாவை எதிர் கொண்டார்.துவக்கத்தில் இருந்து விறுப்பாக நடந்த இந்த போட்டியின் துவக்கத்தில் சாய்னா புள்ளிகளை குவித்தார். அதன் பிறகு, எழுச்சியடைந்த சீன வீராங்கனை புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் விறு விறுப்படைந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்து சம நிலையை அடைந்தனர். முதல் செட் டை 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தார் சீனா வீராங்கனை வாங் ஜின்.
அப்போது, அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அந்த வலியோடு ஆட்டத்தை தொடர்ந்த அவர், இரண் டாவது செட்டில் ஒரு புள்ளி எடுத்த போது வலி மேலும் அதிகமானது. இத னைத் தொடர்ந்து அவர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே, இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. மூன்றாவது இடத்தை பிடித் ததால் சாய்னாவுக்கு வெண்கலம் கிடைத் தது.