நிதிப்பற்றாக்குறையைவிட வசூலிக்காமல் விட்ட தொகை அதிகம் பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்
புதுதில்லி, பிப். 25-கடந்த மூன்றாண்டுக ளும் நாட்டில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறைத் தொகை யை விட கார்ப்பரேட்டு களுக்கும், பணக்காரர்களுக் கும் அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகளும், வசூலிக் காமல் விட்ட தொகைக ளும் அதிகம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டி ருந்த கேள்விக்குப் பதிலளிக் கையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் ஒப் புக்கொண்டுள்ளார்.நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, மக்களவை உறுப்பினர் பி. ஆர். நடராஜன், கடந்த மூன் றாண்டுகளில் ஒவ்வோ ராண்டும் அரசின் நிதிப்பற் றாக்குறையும் அதேபோல் அரசு கார்ப்பரேட்டுகளிட மும் பணக்காரர்களிடம் வசூலிக்காமல் விட்ட தொகை எவ்வளவு என்றும் நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கடந்த மூன்றாண்டுகளிலும் நாட்டில் இருந்த நிதிப்பற் றாக்குறையைவிட கார்ப் பரேட்டுகளிடம் வசூலிக்கா மல் கைவிட்ட தொகையும் பணக்காரர்களிடம் வசூலிக் காமல் விட்ட சுங்கம் மற் றும் கலால் வரிகளும் அதி கம் என்பதை ஒப்புக்கொண் டார். அதாவது, 2009-10ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டு களின் நேரடி வரியில் 72 ஆயிரத்து 881 கோடி ரூபா யும், பணக்காரர்களிடம் இருந்து வசூலிக்க வேண் டிய சுங்கவரியில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 288 கோடி ரூபாயும், கலால் வரியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 121 கோடி ரூபாயும் வசூலிக்கா மல் விடப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சத்து 37 ஆயிரத்து 290 கோடி ரூபாயாகும். ஆனால் அந்த ஆண்டில் நிதிப்பற் றாக்குறை 4 லட்சத்து 18 ஆயிரத்து 482 கோடி ரூபாய் மட்டுமே.அதேபோன்று 2010-11ஆம் ஆண்டில் கார்ப்ப ரேட்டுகளிடம் வசூலிக்கா மல் விடப்பட்ட நேரடி வரி 83 ஆயிரத்து 328 கோடி ரூபாயாகும். பணக்காரர்களி டம் வசூலிக்காமல் விடப் பட்ட சுங்க வரி 1 லட்சத்து 72 ஆயிரத்து 740 கோடி ரூபாய். கலால் வரி 1 லட் சத்து 92 ஆயிரத்து 227 கோடி ரூபாய். ஆக மொத் தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 295 ரூபாய் வரிவருவாய் வசூ லிக்காமல் அரசாங்கத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை என்பது 3 லட் சத்து 73 ஆயிரத்து 592 கோடி ரூபாய் மட்டுமே. 2011-12ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்ச லுகை குறித்து அமைச்சர் எதுவும் கூறவில்லை. ஆயி னும் பணக்காரர்களுக்கு சுங்கம் மற்றும் கலால் வரி களில் வசூலிக்காமல் விடப் படும் தொகை குறித்து பட் ஜெட் மதிப்பீட்டளவு 4 லட்சத்து 35 ஆயிரத்து 820 கோடி ரூபாய்களாகும். ஆனால் இதே கால அள வில் ஏற்பட இருக்கும் நிதிப் பற்றாக்குறை என்பது பட் ஜெட் மதிப்பீட்டின்படி 5 லட்சத்து 13 ஆயிரத்து 591 கோடி ரூபாயாகும். கார்ப் பரேட்டுகளுக்கு நேரடி வரியில் வசூலிக்காமல் விட்ட தொகையையும் தெரிவித்தி ருந்தால் நிச்சயமாக இந்த ஆண்டிலும் நிதிப்பற்றாக் குறையைவிட வசூலிக்கா மல் விட்ட தொகையின் அளவே அதிகமாக இருந் திருக்கும்.இவ்வாறு பணக்காரர் களுக்கு வரிச்சலுகைகளை அளித்துள்ள அதேசமயத் தில் நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்ட பட்ஜெடில் திட் டம் சாரா செலவினங்க ளுக்கு ஒதுக்கப்படும் செல வினத்தில் 10 விழுக்காடு வெட்டிக் குறைத்திடவும், திட்டம் மற்றும் திட்டம் சாரா பணியிடங்களை உரு வாக்குவதற்குத் தடை விதித் தும், மாநிலங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், சுயேச் சையான அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீட்டில் கட்டுப்பாட் டைக் கொண்டுவருவதன் மூலமும், மானியங்களைச் சுருக்கியும், நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட் டிருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள் ளார். (ந.நி.)
தகவல்: தீக்கதிர் 26.02.2013
தகவல்: தீக்கதிர் 26.02.2013