நியூயார்க்: அம்பானி சகோதரர்கள், அசிம் பிரேம்ஜி, என்.ஆர். நாராயண மூர்த்தி ஆகியோர் போர்பஸ் இதழின் பட்டியலில் வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் வரிசையில் உள்ளனர். இவர் களையும் உள்ளடக்கி உலகக் கோடீஸ் வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று போர்பஸ் குறிப்பிட்டுள்ளது. போர்பஸ் பட்டியலில் இடம் பெற் றுள்ள 1,226 கோடீஸ்வரர்களில் மெக்சி கோ நாட்டைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறைத் தொழிலதிபர் கார் லோஸ் ஸ்லிம் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 69 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் கார்லோஸ் தொடர்ந்து 3 வருடங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 61 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவ்வரிசையில் மூன்றாவ தாக வாரன் பஃப்பெட் இடம் பெற்றுள் ளார். அவருடைய சொத்து மதிப்பு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த வருடம் இருந்த கோடீஸ் வரர்களின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று போர்பஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை 57 ஆகும். இந்தியர்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பவர் ரிலை யன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம் பானி ஆவார். அவருடைய சொத்து மதிப்பு 22.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த ஆண்டு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்த போதி லும் 54 வயதான முகேஷ் அம்பானி பட்டி யலில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார். |