தியாக பூமி நாகையில் கம்பீரமாக நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நிகழ்வுகள் அழியாத நினைவு களாக பளிச்சிடுகின்றன. வீர மரணம் எய்திய தியாக சீலர்களின் குடும்பத்தினர் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சமூக விரோதி களால் கொலையுண்ட தோழர் நாவலன் குடும்பத்தினர் மேடைக்கு வந்தபோது, எங் கும் நிசப்தம். கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத், நாவலன் தாய், தந்தை, துணைவியார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப் போது நாவலனின் துணைவியார் தோழர் என். வசந்தா தன் முஷ்டியை கம்பீரமாக உயர்த்தியபோது பிரதிநிதிகள் அனைவரும் எழுந்துநின்று வீர வணக்கம் செலுத்தினர்.
“நாவலன் தோழன்- எங்கள் தோழன்; சிந்திய இரத்தம் - எங்கள் இரத்தம்” என்ற இடி முழக்கங்களால் மாநாட்டு அரங்கம் அதிர்ந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத் தில் சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட தோழர் வேலுச்சாமி மகன் வினோத் (வயது 7) மேடைக்கு வந்தபோது அனைவரது கண் களும் விரிந்தன. கட்சியின் மாநிலச் செய லாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், வினோத்தை வாரி அணைத்தார். இரு கைகளாலும் தூக்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பாசமழை பொழிந்த காட்சி பார்த்தவர் கண்களைவிட்டு அகலவில்லை.
எழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுகளையும், சீரழிந்து கிடக்கும் தமிழகத்தை செப்பனிட மாநாடு நிறை வேற்றிய தீர்மானங்களையும் தீக்கதிர் ஏடு திக்கெட்டும் கொண்டு செல்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் தீக்கதிர் நாளேடு உழைக்கும் மக்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் விளங்கி வருகிறது. கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் தமிழ்மக்களின் மனசாட்சியாக தீக்கதிர் விளங்குகிறது. நீதி கேட்டுப் போராடும் மக்களின் எழுச்சியை அது அஞ் சிடாமல் வெளிச்சத்திற்கு கொண்டு வரு கிறது. தமிழகத்தில் நடைபெற்ற எண்ணற்ற தொழிலாளர் மற்றும் மக்கள் எழுச்சிகளில் அது தனது தனிமுத்திரையைப் பதித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் பகட்டாக நடத்தி வரும் ஏடுகளுக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சி நடத்தும் பத்திரிகைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. சீரழிந்துகொண்டு இருக்கும் இந்த சமுதாய அமைப்பைக் கண்டு மற்ற ஏடுகள் கோபம் கொள்வது இல்லை.
கோடானுகோடி மக்கள் சுரண்டல் கூட்டத்தால் சூறையாடப் படுவது பற்றியும் இவர்களுக்கு கவலை யில்லை. சுவாரஸ்யமான செய்தி என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்கும் அசிங்க மான, அருவருக்கத்தக்க செய்திகளை குப்பைகளாகக் குவித்துவருகின்றன. சாராய அதிபர் விஜய் மல்லையா நடத்தும் விமானக் கம்பெனிக்கு நஷ்டம் என்றால் வணிக ஏடுகளும், ஆட்சியாளர்களும் பதறுகிறார் கள். உயிர்வாழ உணவு அளிக்கும் விவ சாயிகள் தற்கொலை செய்து செத்து மடிந் தாலும் இவர்களது கல்மனம் கரைவது மில்லை; கண்டுகொள்வதும் இல்லை. இத்தகைய சூழலில் உழைக்கும் மக்களின் குரலை எதிரொலிக்கும் அரிய சேவையில் தீக்கதிர் ஈடுபட்டுவருகிறது.தீக்கதிர் ஏடு தனது நெடும் பயணத்தில் 50 வது ஆண்டை தொட்டு நிற்கிறது. 1963ம் ஆண்டு 29ம் தேதி அது தனது முதல் ஒளிக் கதிரை பாய்ச்சியது.தீக்கதிர் ஏட்டின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்டவர் நகர் என்ற இடத்தில் ஓர் அறை யில் செயல்பட்டது. காலால் மிதித்துத் தான் இயந்திரத்தை இயக்க வேண்டும்.
4 பக்கம் கொண்ட பத்திரிகையின் விலை 10 காசு. பத் திரிகைக்கு வரவேற்பு கிடைக்கத் துவங்கிய தும் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டன. பத்தி ரிகை அலுவலகம் சைதாப்பேட்டைக்கு மாற் றப்பட்டது.1964ம் ஆண்டு திருவல்லிக் கேணி டாக்டர் நடேசன் சாலையில் இருந்த கட்டிடத்திலிருந்து தீக்கதிர் வெளிவரத் துவங்கியது.1969ம் ஆண்டு தீக்கதிர் மதுரையி லிருந்து தினசரியாக வெளிவந்தது. மதுரை வடக்குச் சித்திரை வீதியிலிருந்த வாடகைக் கட்டிடம் ஒன்றின் கீழ்தளத்தில் தீக்கதிர் அலு வலகம் செயல்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுவதற்கு முன்பு ‘ஜனசக்தி’ ஏட்டின் மதுரை பதிப்பை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த கட்டிடம் பைபாஸ் சாலையில் இருந்தது. 1973ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி அந் தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அதை விரிவாக்கம் செய்தது. அதே ஆண்டு நவம்பர் 7ம் தேதி அக்டோபர் புரட்சி தினத்தன்று புதிய கட்டிடத்தை தோழர் பி.ராமமூர்த்தி திறந்து வைத்தார். அந்தக் கட்டிடத்திலிருந்து தீக்கதிர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது.1985ம் வருடம் சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாட் டில் பி.டி. ரணதிவே, பி. ராமமூர்த்தி, ஆர். உமாநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங் கெடுத்தனர். மாநாட்டு அரங்கில் தீக்கதிர் வளர்ச்சி பற்றிய விவாதமும் சூடுபிடித்தது. தீக்கதிருக்கு புதிய அச்சு இயந்திரம் வாங்க வேண்டுமென்று தோழர் பி.ராமமூர்த்தி அறைகூவல் விடுத்தார்.
மாநாட்டுப் பிரதிநிதிகள் உற்சாகத்துடன் அந்த வேண்டு கோளை ஏற்றனர். மாநாட்டு அரங்கிலேயே நிதி குவிந்தது. தோழர்கள் வி.பி. சிந்தன் ரூ.1001, ஏ.அப்துல் வஹாப் ரூ. 5,000, அரு ணன் ரூ.2,000, ஆர்.வெங்கிடு(கோவை) ரூ.2,000, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.பழனிவேல் ரூ.1,000, கம்பம் தர்மராஜ் ரூ.1,000, டி.கே.ரங்கராஜன் ரூ.500, சிதம்பரம் மூசா ரூ.501, கே.வைத்தியநாதன் (சிஐடியு) ரூ.500 என வாரி வழங்கியவர்களின் பட்டி யல் நீண்டது. 1987ம் ஆண்டு தீக்கதிர் அச்சிடுவதற் கான ஆப்செட் இயந்திரம் வாங்கப்பட்டது. கட்சித் தோழர்கள் இதற்காக நிதியை வாரி வழங்கினர். கேரள முதலமைச்சர் இ.கே. நாயனார் புதிய இயந்திரத்தை ஜூன் மாதம் இயக்கி வைத்தார்.1993ம் ஆண்டு நவம்பரில் தீக்கதிர் ஏட்டின் சென்னைப் பதிப்பு உதயமானது. கேரள முன்னாள் முதலமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல் பிரதியை வெளியிட, குன்றக்குடி அடிகளார் பெற்றுக்கொண்டார். 2007ம் ஆண்டு மே 23 அன்று கோவைப் பதிப்பும் 2010ம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திருச்சி பதிப்பும் தொடங்கப்பட்டது.
இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக குறிப் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக முதலாளித்துவ ஊடகங்கள் அவதூறு களையும், விஷக்கருத்துக்களையும் வாரி இறைத்துவருகின்றன. இவற்றை எதிர் கொள்ள தீக்கதிர் பேராயுதமாக மக்கள் கை யில் சுழல வேண்டியுள்ளது. 1975ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு 19 மாத காலம் நீடித்த அவசரநிலை காலத்தில் தீக் கதிர் ஏடு பல அடக்குமுறைகளைச் சந்தித் தது. 1991ம் ஆண்டு தேசவிரோதிகளால் ராஜீவ் காந்தி கொலையுண்டபோது தீக்கதிர் அலுவலகம் தீயிடப்பட்டது. பாட்டாளி வர்க்க அரசியலும் மார்க்சியத் தத்துவமும் பக்க பலமாக உள்ள காரணத்தால் தீக்கதிர் வளர்ச் சியை யாராலும் தடுக்க முடியவில்லை. பல்வேறு இழப்புகளைத் தாங்கிக் கொண்டு தீக்கதிர் தனது பயணத்தைத் தொடர்கிறது. இந்நிலையில் தீக்கதிருக்கு வலுவான கட் டமைப்பை உருவாக்கவும் வளர்ச்சிப் பணி களை முன்னெ டுத்துச் செல்லவும் கணிச மான மூலதனம் தேவைப்படுகிறது.
இதற் காக தமிழகம் தழுவிய வசூல் இயக்கத்தை மார்ச் 13-14 தேதிகளில் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை, எழுச் சியைப் பறைசாற்றும் தீக்கதிர் விரிவாக்கப் பணிகளில் அனைவரும் பங்கெடுப்போம்; களம் இறங்குவோம்; கடமை ஆற்றுவோம்.