சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- யெச்சூரி - CPI (M) தலைவர்கள் நேரில் ஆறுதல்


சிவகாசி,செப்.6-சிவகாசி அருகே புத னன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயி ரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவேண் டும். இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத் தரவிடவேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., வலியுறுத் தினார்.சிவகாசி அருகே முத லிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பட்டாசு மற்றும் புளு மெட்டல் நிறுவனத்தில் புத னன்று பகல் 12 மணி அள வில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 38 பேர் பரிதாபமாக உயி ரிழந்தனர். 50க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்து சிவகாசி, விருதுநகர், சாத் தூர், அருப்புக்கோட்டை, மதுரை மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்றுவரு கின்றனர்.விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரையும், காய மடைந்தவர்களையும் அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம்யெச்சூரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க இந்திய மாணவர் சங்க முன்னாள் தலைவர்களில் ஒருவருமான சுஜன் சக்ர வர்த்தி, மத்தியக்குழு உறுப் பினர்கள் கே.பாலகிருஷ் ணன் எம்.எல்.ஏ., அ.சவுந்தர ராசன் எம்.எல்.ஏ, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பால சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் அ.சேகர், மாவட்டசெயற் குழு-மாவட்டக்குழு உறுப் பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் உள்ளிட் டோர் வியாழனன்று சந் தித்து ஆறுதல் கூறினர்.
முன்னதாக விபத்து நிகழ்ந்த முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையை பார்வையிட்டனர். அங்கிருந்த மக்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர். இவ்விபத் தில் பல்வேறு நபர்கள் உயிர் பிழைப்பதற்கு காரணமாக இருந்த கட்சியின் பகுதிச் செயலாளர் எம்.சி.பாண்டி யன் சம்பவம் குறித்து கூறி னார். விபத்தில் பல கட்டி டங்கள் இடிந்து தரைமட் டமாகியிருந்தது.பின்னர் முதலிப்பட்டி யில், செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம்யெச்சூரி எம்.பி., விபத்தில் இறந்தவர் களின் குடும்பத்திற்கு தமது சார்பிலும், கட்சியின் சார்பி லும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். விபத்தில் பலி யானவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.2லட்சம் வழங்கி யுள்ளது. இதை ரூ.10லட்ச மாக உயர்த்தி வழங்கவேண் டும். இந்த விபத்தில், மாநில அரசுக்கும் மத்திய அரசுக் கும் பொறுப்பு உள்ளது. இந்த ஆலை இயங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள் ளது. இந்தச் சூழலில் இந்த ஆலை எப்படி இயங்கியது? முதலாளிகளின் லாபநோக் கிற்காக இது போன்ற உயிரி ழப்புகள் நிகழ்வதை ஏற்க முடியாது.பட்டாசு ஆலைகள் இயங்குவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களுக்கு சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால் அதை அமல்படுத்துவதில், கண்கா ணிப்பதில் இங்குள்ள அமைப்புகள் ஊழலுக்கு துணைபோகின்றன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். சட்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்கள் குரல் எழுப்புவார் கள்.இது குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இந்த விசாரணையையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற் குள் முடிக்க வேண்டும் என் றார்.விபத்தில் படுகாயம டைந் தவர்களுக்கு நிவார ணம் வழங்குவது என்ப தோடு மட்டுமல்லாமல், சிறப்பு சிகிச்சை, அவர்க ளின் மறுவாழ்விற்கு தேவை யான உதவிகளை அரசு செய்யவேண்டும் என்றார்.தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.