பெங்களூரு (ரவீந்திரநாத் தாகூர் நகர்),செப்.12-இந்திய உணவுக் கிடங்குகளில் உபரி இருப்பு மூலம் நிரம்பி வழியும் உணவுப் பொருட்களை பொது விநியோ கத்திட்டத்தில் வழங்கி விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது என்று சிஐடியு அகில இந்திய செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கூறினார்.பெங்களூரில் நடைபெற்று வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9 வது அகில இந்திய மாநாட்டை வாழ்த்தி செவ்வாயன்று (செப்.11) அ.சவுந்தரராசன் பேசியதாவது:-மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்தித்து வரும் நெருக்கடிகள் நகர்ப்புற மத்திய தர மக்களி டம் அதன் மதிப்பை இழக்கச் செய்துள்ளது. விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பருவமழை தவறியதால் மேலும் பிரச்சனைகள் கூடியுள்ளன. உற்பத்தி துறையும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒட்டு மொத்த பொருளாதார நிலை மிகவும் மந்தமாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நிலை மிகப் பெரும் பொருளா தார வீழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
பணவீக்கம் இரட் டை இலக்கத்தை எட்டியுள்ளது. உண வுப்பொருட் களின் விலை உயர்ந்துள் ளது. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவிலான இடம்பெயர்தலுக்கு வழிவகுத்துள்ளது. ஒப்பந்த முறை தினக் கூலி என்பது நடை முறையாகி விட்டது. இவை சட்டரீதி யான உரிமைகளை மறுப்ப தாக உள்ளன. இவற் றை முறியடிப்பது ஜனநாயக இயக்கங் களின் கடமையா கும். மக்கள் நடத் தும் இயக்கங்களுக்கு தலைமை ஏற்கவும், அதற்கு ஆதரவான சக்திகளை திரட்ட வும் இந்த தேசம் இளைஞர்களைத் தான் நம்பியிருக்கி றது. அந்த வரலாற் றுக் கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை தங் களுக்கு சாதகமாக்க பிரிவினை சக்திகள் முயற்சிக்கின்றன. இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தங்களது வழக்கமான முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். வட கிழக்கு மாநிலங்களிலும் பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிவினை சக்திகள் உத் தரப்பிரதேசத்தில் குறிப்பாக அதன் மேற்கு பகுதியில் ஏரா ளமான பிரச்சனைகளை எழுப்பி வருகிறார்கள். இந்துத் துவா சக்திகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்ட மிட்ட பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்தாக்கரே பீகார் மாநில மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பவர்கள் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நாட்டு மக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்வதற்கு உரிய பாதுகாப்பை மத்திய-மாநில அரசுகள் உறுதிப் படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான உணவுக் கிடங்குளில் 21.2 மில்லியன் உணவுப் பொருட்களை வைக்க முடியும். ஆனால் அரசின் கையிருப்பு 71.2 மில்லியன் டன்களாக உயர்ந்து கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. உபரி இருப்பை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேவைப்படும் மக்களுக்கு வழங்க பிரதமரின் அலுவலகமும் திட்டக்குழு வும் மறுத்து வருகின்றன. அவற்றை வழங்கினால் மக் களுக்கு தேவையான உணவு கிடைக்கும். வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறையும். ஆனால் மானியம் அதிகரித்து வரவு-செலவு கணக்கில் துண்டு விழும் என்பதால் தான் இதை அரசு மறுக்கிறது. லட்சோப லட்சம் மக்கள் உணவு பாதுகாப்புக்கான இயக்கத்தில் பங்கேற்று வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் வழங்க கோருகிறார்கள். வாலிபர் சங்கம் சாதாரண மனிதர்களின் இத்தகைய கோரிக் கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் களத்தில் இறங்க வேண்டும் என்று சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்