ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டமாக்க எதிர்ப்பு ரயில்வே தொழிலாளர் வழக்கை ஏற்று தீர்ப்பாயம் முக்கிய இடைக்கால ஆணை

             தொழிலாளர் ஓய்வூதிய நிதியை தனியார் நிறுவனங் களின் பங்குச் சந்தை சூதாட் டப் பணமாக மாற்றும் புதிய ஓய்வூதிய சட்டத்தை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் சார் பில் தொடுக்கப்பட்ட வழக்கை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்படும் என்று தீர்ப்பாயம் அறி வித்துள்ளது. இடைக்காலத் தீர்ப்பாக, பணிக்காலத்தில் உயி ரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கும் ஊனமுற்று வேலையிழப்போருக்கும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட ஆதாயங்களை ரயில்வே நிர்வா கம் வழங்கியாக வேண்டும் என்றும் தீர்ப்பாயம் ஆணை யிட்டுள்ளது.

           கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அவசர அவசர மாக புதிய ஓய்வூதிய சட்டத்தை நிறைவேற்றியது தெரிந்ததே. அதன்படி, தொழிலாளர் ஊதி யத்திலிருந்து மாதந்தோறும் 10 விழுக்காடு பணம் பிடித்துக் கொள்ளப்படும். அரசுத் தரப்பி லிருந்து அதற்கு இணையான தொகை செலுத்தப்பட்டு, மொத் தத் தொகையும் ஓய்வூதிய நிதி மேலாளர்கள் எனப்படும் தனி யார் நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்படும். இதற்கு வட்டி எதுவும் கிடையாது. அந்த தனி யார் நிறுவனத்தினர் இவ்வாறு லட்சக்கணக்கான தொழிலாளி களிடமிருந்து திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, தொழிலாளிக்கு அவர் ஓய்வு பெறும்போது நிதி வழங்கப் படும். அப்போது அரசியல், பொருளாதார வீழ்ச்சி, இயற் கைப் பேரிடர் போன்ற காரணங் களால் பங்குச் சந்தை சரிவ டைந்திருக்குமானால், தொழி லாளிக்கு மிக அற்பமாகவே பணம் கிடைக்கும், அல்லது இழப்பு என்று கூறி பணமே கிடைக்காமலே போகலாம்.
                அப்படியே ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் அதில் 60 விழுக்காடு மட்டுமே தரப் படும். மீதி 40 விழுக்காடு தொகை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் வைப்பு நிதியாக ஒப்படைக்கப்படும். அந்த காப்பீட்டு நிறுவனங் களும் இந்த நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டு, அதன் ஏற்ற இறக்கங் களுக்கு ஏற்பவே திருப்பித் தரும். இதனால், ஒரு தொழி லாளி மரணமடைய நேரிட் டால் அவரது ஓய்வூதிய முத லீட்டையே குடும்பத்தினர் இழக்கும் அபாயம் உள்ளது.

                  மத்திய அமைச்சரவை யின் ஆணைகள் மூலமாகத் திருத்தப்பட்ட விதிகளுடன் இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2004 ஜன வரி 1 முதல் பணிக்கு வந்தோ ருக்கு இந்த ஆணைகள் அமலாக்கப்படும் என்றும் இவர்களுக்கு முந்தைய சட்டத் தின் ஆதாயங்கள் எதுவும் கிடைக்காது என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது. இவர்களில் பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம், இறப்புப் பணிக்கொடை, ஊனமுற்று வேலையிழப்போருக்கு ஊன முற்றதற்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய ஆதாயங் களும் இல்லை என ரயில்வே நிர்வாகம் ஆணை பிறப்பித்துள் ளது.

                        ரயில்வேயில் புதிய ஓய்வூ திய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், உயிரிழக் கிற மற்றும் ஊனமடைகிற தொழிலாளிகளுக்கான விதி களை எதிர்த்தும் தட்சிண் ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் (டிஆர்இயு-சிஐடியு), ஐசிஎப்- யுனைட்டட் ஒர்க்கர்ஸ் யூனி யன் (சிஐடியு) ஆகிய இரு சங் கங்களின் சார்பில் சென்னை யில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப் பாயத்தில் இம்மாதம் 20ம்தேதி அன்று தனித்தனி வழக்குகள் (ஓஏ/575/2011, ஓஏ/576/2011) தொடுக்கப்பட்டன. இரு சங்கங் களின் சார்பில் வழக்கறிஞர் ஆர். வைகை இந்த வழக்கு களைத் தாக்கல் செய்தார்.

                  நீதிபதிகள் கே. இளங்கோ, ஆர். சதாபதி ஆகியோர் கொண்ட குழு இந்த வழக்குகளை ஏப் ரல் 21 அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

                        குடியரசுத் தலைவர் ஓப்பு தலுடன் ஆணைகள் வெளி யிடப்படவில்லை என்பது வழக்கு விசாரணயில் சுட்டிக் காட்டப்பட்டது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு பிறப்பித்த சட்டத்தில் நிர்வாக ஆணைகள் மூலம் திருத்தங் கள் செய்திருப்பது அரசமைப்பு சாசனத்துக்கு எதிரான செயல் என்று வாதிடப்பட்டது.



                        செவ்வாயன்று (ஏப்.26) முதல்கட்ட இடைக்காலத் தீர்ப்பை அளித்த நீதிபதிகள் குழு, 2004 ஜனவரி 1க்கு முதல் நியமிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளிகள் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம், இறப்புப் பணிக்கொடை ஆகியவற்றை வழங்க ஆணையிட்டனர். ஊன முற்று வேலையிழக்க நேரிடும் தொழிலாளர்களுக்கு ஊன முற்றதற்கான ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்கவும் ஆணையிட்டனர்.

                          புதிய ஓய்வூதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரும் மனுக்கள் ஜூன் 1 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதி பதிகள் அறிவித்தனர்