13TH INTERNATIONAL MEET OF COMMUNIST & WORKERS' PARTY AT ATHENS



The proceedings of the 13th International Meeting of the Communist and Workers parties were successfully completed which was hosted by the KKE (Communist Party of Greece ) in Athens from the 9th to the 11th of December 2011.
There were over 100 representatives at the meeting of 78 Communist and Workers parties from 59 countries from every continent in the world. Several Communist and Workers parties were not able to attend and sent messages of greetings to the International Meeting.

The participation of the Communist and Workers parties surpassed every precedent. These meetings began in Athens at the initiative of the KKE 13 years ago, where it was held for 7 consecutive years from 1999, and later travelled to every continent of the world to return this year to Athens.

The theme of this years meeting was: Socialism is the Future!The international situation and the experience of the communists 20 years after the counterrevolution in the USSR. The tasks for the development of the class struggle in conditions of capitalist crisis, imperialist wars, of the current popular struggles and uprisings, for working class-popular rights, the strengthening of proletarian internationalism and the anti-imperialist front, for the overthrow of capitalism and the construction of socialism”.

The parties that participated in the meeting discussed the conclusions which are to be drawn 20 years after the counterrevolution in the USSR, they exchanged experiences and assessments concerning the developments and tasks of the communists.

P.RAMA MURTHY- A REVOLUTIONARY LEADER

நல்லிணக்க நாயகர்!



‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண்டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

_____________________

இந்திய விடுதலைப்போராட்ட பேரியக்கத்தின் போது காங்கிரஸ் கட்சி, தவணை முறையில் சலுகை கேட்டு மனு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ‘பூரண விடுதலை’ என்ற முழக்கத்தை முதன் முதலாக முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு மாநிலங்களின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்த போது, தட்சிணபிரதேசம் போன்ற காரிய சாத்தியமற்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் மொழி வழி மாநிலங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, தனித்துவம் பாதுகாக்கப்பட மொழி வழி மாநிலங்களே சிறந்த தீர்வாக அமைய முடியும் என்பது பொதுவுடைமை இயக்கத்தின் தொலை நோக்குப் பார்வை.

1952ம் ஆண்டு தேசத்தின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திராவின் பெரும் பகுதி, கர்நாடகத்தின் ஒரு பகுதியைக் கொண் டதாக சென்னை ராஜதானி இருந்தது. அந்தத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் அடிப்படையில் தந்தை பெரியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. நியாயமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்த ராஜாஜி கட்சி தாவிகளின் உதவியோடு காங். ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.

சென்னை ராஜதானி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பி.ராமமூர்த்தி தலைமையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தமிழிலும், கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மலையாளத்திலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தெலுங்கிலும் இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாகவே ஆந்திர, கேரள மாநிலங்கள் உருவாகின.

அதன்பின்னரும் கூட சென்னை ராஜதானி என்றேஅழைக்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு இதற்கு உடன்பட மறுத்தது. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரடியாக வந்து பி.ராமமூர்த்தி உண்ணா விரதத்தை கைவிடுமாறும், அனைவரும் சேர்ந்து தொடர்ந்து போராடலாம் என்றும் கூறினார்.

‘இன்றைய ஆட்சியில் வாழ்வதை விட நான் சாவதே மேல்’ என்று கூறிவிட்டார் சங்கரலிங்கனார். 77 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவரது மரண சாசனத்தின்படி அவரது உடல் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் இறுதி நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

சென்னை தமிழகத்தோடு தக்கவைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது அவரது வரலாற்றாசிரியர் என்.ராமகிருஷ்ணன் கூறும் தகவல்.

1953ம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மணி நேரம் தமிழிலேயே நுட்பமான பொருளாதார விஷயங்களை எடுத்துரைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த சி.சுப்பிரமணியம், தமிழில் பொருளாதார பிரச்சனைகளை விளக்கமுடியும் என்பதை ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று கூறித்தான் தமது பதிலுரையை துவக்கினார்.

1956ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி என்று பிரகடனப்படுத்தும் சட்டமுன் வடிவை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த பி.ராமமூர்த்தி எழுந்து, இந்நாள் தமிழ் நாட்டின் திருநாள் என்று நெஞ்சம் நெகிழ வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் ஆட்சிமொழி ஆனால் மட்டும் போதாது. பயிற்று மொழி ஆகவும் வேண்டும் என்றார். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறவில்லை என்பது நெஞ்சில் முள்ளாய் உறுத்தும் நிஜம்.

நெய்வேலியில் அனல் மின்நிலையம் அமைந்ததிலும், திருச்சியில் ‘பெல்’ நிறுவனம் அமைந்ததிலும், சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை தமிழக தொழில் வளர்ச்சியின் வரலாறு அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.

மதவெறி சக்திகளால் இன்று முடக்கப் பட்டுள்ள சேதுக்கால்வாய் திட்டம் குறித்து 1967ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மகத்தான தலைவர் பி.ராமமூர்த்தி.

1952ம் ஆண்டு பெரியாறு அணையிலிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் இருந்து மின் உற்பத்தி செய்யும் புனல்மின் திட்டம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ராமமூர்த்தியை அழைத்து இது குறித்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதல்வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 2பைசா தருவதென்று பேசி, அதற்கு பட்டம் தாணுப் பிள்ளையை சம்மதிக்கச் செய்தார் பி.ராமமூர்த்தி.

இது குறித்து பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இன்றும் அனைவரும் மனதில் நிறுத்தவேண்டிய ஒன்றாகும்.

‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண் டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

1957ம் ஆண்டு தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கேரளத்தில் அமைந்தது. கேரளத்திலிருந்து அரபிக்கடல் நோக்கிப் பாய்ந்த பரம்பிக்குளம், ஆழியாறு நதிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடவேண்டும் என்பது நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். இது குறித்து முதல்வராக இருந்த இஎம்எஸ் நம்பூதிரிபாட் அவர்களிடம் பி.ராமமூர்த்தி பேசினார். இரு பெரும் தலைவர்களின் முயற்சியால் உருவானதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். ஆழியாறு பரம்பிக்குளம் நதிகளில் அணை கட்டி நீரை தேக்கி வைத்து, உபரி நீரை தமிழகத்திற்குத் தருவது என்றும் அதற்காகும் செலவுகளை இரு மாநில அரசுகளும் சமமாக ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரு அரசுகளும் செலவினை ஏற்று அணை கட்டப்பட்டது. இதன் மூலம் கோவை, ஈரோடு மாவட் டங்களுக்கு பாசனவசதி கிடைத்தது.

ஒன்றாக இருந்த பஞ்சாப் மாநிலம், பஞ்சாப், ஹரியானா என்று பிரிக்கப்பட்ட, பிறகு சண்டிகர் நகர் யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. இருதரப்பிலும் கொந்தளிப்பான சூழ்நிலை. அப்போது அப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் துடன் பெரும் பங்காற்றியவர் தோழர் பி.ராம மூர்த்தி.

அசாமில் பிரிவினை கோஷம் எழுந்த போதும் தோழர் பி.ராமமூர்த்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கட்சியின் சார்பில் முன்னின்றார். அவரது சக தோழரும் போராளியுமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித்து வரைந்துள்ள சொற்சித்திரம் இது: ‘நாட்டை எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக தேசிய பிரச்சனைகளை பி.ஆர். வெகுவிரைவில் புரிந்துகொள்வார். பஞ்சாப் மாநில சீரமைப்பிலும், அதிலிருந்து தோன்றிய பிரச்சனைகளிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அசாம் குறித்து அவர் எழுதிய பிரசுரமானது அச்சமயத்தில் கட்சியின் கண்ணோட்டத்தை விளக்கியது.’

1978ம் ஆண்டு சீமென்ஸ் என்ற ஜெர்மானிய நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை விழுங்க முயற்சி செய்தபோது அதை எதிர்த்து சத்திய ஆவேசத்துடன் போராடியவர் பி.ஆர். அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தனியொரு நூலாகவே வெளிவந்தது. இன்றைக்கு சில்லரை வர்த்தகத்தையும் கூட விழுங்க வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வாய்பிளந்து வருகின்றன. நடை பாவாடை விரித்து நலுங்கு பாடுகிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

தோழர் பி.ராமமூர்த்தி உயர்த்திப்பிடித்த தேசபக்த, வர்க்க ஒற்றுமை பதாகையை ஏந்தி தேசத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க போராடுவதே அவருக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

- மதுக்கூர் ராமலிங்கம்

ஊகவர்த்தகமும், ஊழலும் இணைபிரியாதவை

ஊகவர்த்தகமும், ஊழலும்  இணைபிரியாதவை   மாநிலங்களவையில் Sitharam yechury in Rajya saba

விலைவாசியைக் குறைத் திட மத்திய அரசு, ஊக வணிகத் தைத் தடை செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திட வேண்டும், உணவுக் கிடங்குகளில் மிகுதியாக உள்ள உணவுதானியங்களை பொது விநியோக முறையில் விநியோ கித்திட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும் மாநிலங்களவை த் தலைவருமான சீத்தாராம் யெச் சூரி கூறினார்.

நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில், முன் னெப்போதும் இல்லாத அள விற்கு உணவு மற்றும் அத்தியா வசியப் பொருள்களின் விலை கள் கடுமையாக உயர்ந்திருப்ப தால், சாமானிய மக்களின் மீது அவற்றின் தாக்கம்’ என்ற பொருளில் குறுகிய கால விவா தம் நடைபெற்றது. அதில் பங் கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசி யதாவது: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங் கும்போது நிதியமைச் சர் பதினொரு பக்கஅறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதில் அவர், ‘‘நம் மக்களின் வரு மானத்தில் சீரான வளர்ச்சி, மக்களின் தேவையை அதிகப் படுத்தியிருக்கின்றன. அதுதான் விலைவாசி உயர்வுக்குக் கார ணம்,’ என்று கூறியி ருந்தார். ஆனால், எதார்த்த நிலை என்ன? அரசாங்கம் வெளியிட் டுள்ள பொருளாதார ஆய்வு அறிக்கையே என்ன சொல் கிறது? ‘‘மக்கள் பொருட்களை வாங்குவதற்காக மேற் கொண் டிடும் செலவினம் என்பது 2005-06ஆம்ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, தற் போது 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சியடைந் திருக்கிறது.’’ இதுதான் அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுவதாகும். மக்களின் உண் மையான வருமானம் அதிகரித் திருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். உலகமய ஆதர வாளர்கள் போற்றிப் புகழும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளஅறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் என்ன கூறுகிறது? ‘‘நாட்டில் அதிகபட்சம் ஊதி யம் பெற்று வந்த 10 விழுக் காட்டினர், அடிமட்டத்தில் உள்ள 10விழுக்காட்டினரை விட 12 மடங்கு அதிகம் பெறு கிறார்கள். இது 60களில் இருந் ததைவிட 6 பங்கு அதிகம்.’’ இவ்வாறு ஒளிரும் இந்தியர் களுக்கும், அவதியுறும் இந்தி யர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்திருக் கிறது. இந்த இடைவெளியைக் குறைத்திட, சாமானிய மக்க ளின் அவல நிலையை ஓரளவா வது போக்கிட, விலைவாசி யைக் குறைத்திட வேண்டும். அதற்கு மூன்று முக்கிய நட வடிக்கைகளை அரசு எடுத் திடவேண்டும் என்றுதான் நாங் கள் கூறுகிறோம். கடந்த இரு ஆண்டுகளில் உணவுப் பொருட் கள் மீதான பணவீக்கம் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. தற்போது அது 12 விழுக்காட்டிற்கும் அதி கமாக இருக்கிறது. நாட்டில் வருமானம் அதிகரித்திருக் கிறதென்றால் அது உயர்மட் டத்தில் உள்ள ஒருசிலரின் கை களுக்குத்தான் சென்றிருக்கிறது. சாமானிய மக்களின் வரு மானம் உயரவில்லை. அவர்கள் விலைவாசி உயர்வினால் கடு மையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விலைவாசி உயர் வுக்கு முக்கியமான காரணி களில் ஒன்று ஊக வர்த்தகம். இலாபம் இல்லை என்றால் யாரும் ஊக வர்த்தகத்தில் முத லீடு செய்ய மாட்டார்கள். விலைவாசி உயரவில்லை என் றால், ஊக வர்த்தகத்தில் லாபம் ஈட்ட முடியாது. விலைவாசி உயரவில்லை என்றால் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய் துள்ளவர்கள் எவ்வித லாபத் தையும் ஈட்ட முடியாது. எனவே விலைவாசி உயர்வுக்கான நிர்ப் பந்தம் இயல்பாகவே ஊக வர்த் தகத்தில் ஈடுபட்டிருப்பவர்க ளிடமிருந்து வருகிறது. எனவே, விலைவாசியைக் குறைத்திட

முதல் கட்டமாக ஊக வர்த்தகத் தைத் தடை செய்ய வேண்டும். ஊக வர்த்தகமும் ஊழலும் இணைபிரியாதவை.ஊக வர்த் தகத்தை இயக்கிக் கொண்டி ருப்பதே கறுப்புப் பணம்தான்.

அடுத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு. தற்போது அரசாங்கம் பெட் ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்திருப்ப தாகக் கூறுகிறது. உலகச் சந் தையில் பெட்ரோலின் விலை உயர்வதால்தான் இங்கும் விலைகள் உயர்த்தப்படுகின்றன என்று அரசுத்தரப்பில் சொல் லப்படுகிறது. ஆனால் இது

உண்மையல்ல. நம் விலைகள், உலக விலைகளுடன் இணைக் கப்படவில்லை. நம் நாட்டில் உற்பத்தியுடன்தான்விலைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக, உணவு தானிய இருப்பு. இன்றைய தினம் மத் திய அரசின் கிடங்குகளில் 600 லட்சம் டன்களுக்கு மேல் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இது வழக்கமாக இருக்கும் இருப்பைக் காட்டிலும்

இரண்டரை பங்குக்கும் அதிக மாகும். எனவே, இவற்றைப் பொது விநியோக முறையில் சாமானிய மக்களுக்கு அளித் திட முன்வரவேண்டும். இது வும் விலைவாசியைக் கட்டுப் படுத்திட உதவும்.இவ்வாறு, ஊக வர்த்தகத்தைத் தடை செய் தல், பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை மீண்டும் குறைத்தல், உபரியாக உள்ள உணவு தானியங்களை பொது விநியோக முறையில் சாமானிய மக்களுக்கு வழங்குதல் ஆகிய மூன்றுமுக்கிய நடவடிக் கைகளின் மூலமாகவும் விலை வாசியைக் குறைத்திட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.