புரட்சியாளர் பகத்சிங்



(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவ ருடன் இணைந்து வெள்ளை யருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட் டவர். பகத்சிங் கைதான வழக் கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என் பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள்.
இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது.
இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது.
எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார்.
பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம். புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள். ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும்.
மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை.
புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.
தமிழில்: ச.வீரமணி

களம் இறங்குவோம்! வி.பரமேசுவரன்



தியாக பூமி நாகையில் கம்பீரமாக நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நிகழ்வுகள் அழியாத நினைவு களாக பளிச்சிடுகின்றன. வீர மரணம் எய்திய தியாக சீலர்களின் குடும்பத்தினர் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சமூக விரோதி களால் கொலையுண்ட தோழர் நாவலன் குடும்பத்தினர் மேடைக்கு வந்தபோது, எங் கும் நிசப்தம். கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத், நாவலன் தாய், தந்தை, துணைவியார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப் போது நாவலனின் துணைவியார் தோழர் என். வசந்தா தன் முஷ்டியை கம்பீரமாக உயர்த்தியபோது பிரதிநிதிகள் அனைவரும் எழுந்துநின்று வீர வணக்கம் செலுத்தினர்.
“நாவலன் தோழன்- எங்கள் தோழன்; சிந்திய இரத்தம் - எங்கள் இரத்தம்” என்ற இடி முழக்கங்களால் மாநாட்டு அரங்கம் அதிர்ந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத் தில் சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட தோழர் வேலுச்சாமி மகன் வினோத் (வயது 7) மேடைக்கு வந்தபோது அனைவரது கண் களும் விரிந்தன. கட்சியின் மாநிலச் செய லாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், வினோத்தை வாரி அணைத்தார். இரு கைகளாலும் தூக்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பாசமழை பொழிந்த காட்சி பார்த்தவர் கண்களைவிட்டு அகலவில்லை.
எழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுகளையும், சீரழிந்து கிடக்கும் தமிழகத்தை செப்பனிட மாநாடு நிறை வேற்றிய தீர்மானங்களையும் தீக்கதிர் ஏடு திக்கெட்டும் கொண்டு செல்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் தீக்கதிர் நாளேடு உழைக்கும் மக்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் விளங்கி வருகிறது. கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் தமிழ்மக்களின் மனசாட்சியாக தீக்கதிர் விளங்குகிறது. நீதி கேட்டுப் போராடும் மக்களின் எழுச்சியை அது அஞ் சிடாமல் வெளிச்சத்திற்கு கொண்டு வரு கிறது. தமிழகத்தில் நடைபெற்ற எண்ணற்ற தொழிலாளர் மற்றும் மக்கள் எழுச்சிகளில் அது தனது தனிமுத்திரையைப் பதித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் பகட்டாக நடத்தி வரும் ஏடுகளுக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சி நடத்தும் பத்திரிகைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. சீரழிந்துகொண்டு இருக்கும் இந்த சமுதாய அமைப்பைக் கண்டு மற்ற ஏடுகள் கோபம் கொள்வது இல்லை.
கோடானுகோடி மக்கள் சுரண்டல் கூட்டத்தால் சூறையாடப் படுவது பற்றியும் இவர்களுக்கு கவலை யில்லை. சுவாரஸ்யமான செய்தி என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்கும் அசிங்க மான, அருவருக்கத்தக்க செய்திகளை குப்பைகளாகக் குவித்துவருகின்றன. சாராய அதிபர் விஜய் மல்லையா நடத்தும் விமானக் கம்பெனிக்கு நஷ்டம் என்றால் வணிக ஏடுகளும், ஆட்சியாளர்களும் பதறுகிறார் கள். உயிர்வாழ உணவு அளிக்கும் விவ சாயிகள் தற்கொலை செய்து செத்து மடிந் தாலும் இவர்களது கல்மனம் கரைவது மில்லை; கண்டுகொள்வதும் இல்லை. இத்தகைய சூழலில் உழைக்கும் மக்களின் குரலை எதிரொலிக்கும் அரிய சேவையில் தீக்கதிர் ஈடுபட்டுவருகிறது.தீக்கதிர் ஏடு தனது நெடும் பயணத்தில் 50 வது ஆண்டை தொட்டு நிற்கிறது. 1963ம் ஆண்டு 29ம் தேதி அது தனது முதல் ஒளிக் கதிரை பாய்ச்சியது.தீக்கதிர் ஏட்டின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்டவர் நகர் என்ற இடத்தில் ஓர் அறை யில் செயல்பட்டது. காலால் மிதித்துத் தான் இயந்திரத்தை இயக்க வேண்டும்.
4 பக்கம் கொண்ட பத்திரிகையின் விலை 10 காசு. பத் திரிகைக்கு வரவேற்பு கிடைக்கத் துவங்கிய தும் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டன. பத்தி ரிகை அலுவலகம் சைதாப்பேட்டைக்கு மாற் றப்பட்டது.1964ம் ஆண்டு திருவல்லிக் கேணி டாக்டர் நடேசன் சாலையில் இருந்த கட்டிடத்திலிருந்து தீக்கதிர் வெளிவரத் துவங்கியது.1969ம் ஆண்டு தீக்கதிர் மதுரையி லிருந்து தினசரியாக வெளிவந்தது. மதுரை வடக்குச் சித்திரை வீதியிலிருந்த வாடகைக் கட்டிடம் ஒன்றின் கீழ்தளத்தில் தீக்கதிர் அலு வலகம் செயல்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுவதற்கு முன்பு ‘ஜனசக்தி’ ஏட்டின் மதுரை பதிப்பை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த கட்டிடம் பைபாஸ் சாலையில் இருந்தது. 1973ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி அந் தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அதை விரிவாக்கம் செய்தது. அதே ஆண்டு நவம்பர் 7ம் தேதி அக்டோபர் புரட்சி தினத்தன்று புதிய கட்டிடத்தை தோழர் பி.ராமமூர்த்தி திறந்து வைத்தார். அந்தக் கட்டிடத்திலிருந்து தீக்கதிர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது.1985ம் வருடம் சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாட் டில் பி.டி. ரணதிவே, பி. ராமமூர்த்தி, ஆர். உமாநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங் கெடுத்தனர். மாநாட்டு அரங்கில் தீக்கதிர் வளர்ச்சி பற்றிய விவாதமும் சூடுபிடித்தது. தீக்கதிருக்கு புதிய அச்சு இயந்திரம் வாங்க வேண்டுமென்று தோழர் பி.ராமமூர்த்தி அறைகூவல் விடுத்தார்.
மாநாட்டுப் பிரதிநிதிகள் உற்சாகத்துடன் அந்த வேண்டு கோளை ஏற்றனர். மாநாட்டு அரங்கிலேயே நிதி குவிந்தது. தோழர்கள் வி.பி. சிந்தன் ரூ.1001, ஏ.அப்துல் வஹாப் ரூ. 5,000, அரு ணன் ரூ.2,000, ஆர்.வெங்கிடு(கோவை) ரூ.2,000, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.பழனிவேல் ரூ.1,000, கம்பம் தர்மராஜ் ரூ.1,000, டி.கே.ரங்கராஜன் ரூ.500, சிதம்பரம் மூசா ரூ.501, கே.வைத்தியநாதன் (சிஐடியு) ரூ.500 என வாரி வழங்கியவர்களின் பட்டி யல் நீண்டது. 1987ம் ஆண்டு தீக்கதிர் அச்சிடுவதற் கான ஆப்செட் இயந்திரம் வாங்கப்பட்டது. கட்சித் தோழர்கள் இதற்காக நிதியை வாரி வழங்கினர். கேரள முதலமைச்சர் இ.கே. நாயனார் புதிய இயந்திரத்தை ஜூன் மாதம் இயக்கி வைத்தார்.1993ம் ஆண்டு நவம்பரில் தீக்கதிர் ஏட்டின் சென்னைப் பதிப்பு உதயமானது. கேரள முன்னாள் முதலமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல் பிரதியை வெளியிட, குன்றக்குடி அடிகளார் பெற்றுக்கொண்டார். 2007ம் ஆண்டு மே 23 அன்று கோவைப் பதிப்பும் 2010ம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திருச்சி பதிப்பும் தொடங்கப்பட்டது.
இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக குறிப் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக முதலாளித்துவ ஊடகங்கள் அவதூறு களையும், விஷக்கருத்துக்களையும் வாரி இறைத்துவருகின்றன. இவற்றை எதிர் கொள்ள தீக்கதிர் பேராயுதமாக மக்கள் கை யில் சுழல வேண்டியுள்ளது. 1975ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு 19 மாத காலம் நீடித்த அவசரநிலை காலத்தில் தீக் கதிர் ஏடு பல அடக்குமுறைகளைச் சந்தித் தது. 1991ம் ஆண்டு தேசவிரோதிகளால் ராஜீவ் காந்தி கொலையுண்டபோது தீக்கதிர் அலுவலகம் தீயிடப்பட்டது. பாட்டாளி வர்க்க அரசியலும் மார்க்சியத் தத்துவமும் பக்க பலமாக உள்ள காரணத்தால் தீக்கதிர் வளர்ச் சியை யாராலும் தடுக்க முடியவில்லை. பல்வேறு இழப்புகளைத் தாங்கிக் கொண்டு தீக்கதிர் தனது பயணத்தைத் தொடர்கிறது. இந்நிலையில் தீக்கதிருக்கு வலுவான கட் டமைப்பை உருவாக்கவும் வளர்ச்சிப் பணி களை முன்னெ டுத்துச் செல்லவும் கணிச மான மூலதனம் தேவைப்படுகிறது.
இதற் காக தமிழகம் தழுவிய வசூல் இயக்கத்தை மார்ச் 13-14 தேதிகளில் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை, எழுச் சியைப் பறைசாற்றும் தீக்கதிர் விரிவாக்கப் பணிகளில் அனைவரும் பங்கெடுப்போம்; களம் இறங்குவோம்; கடமை ஆற்றுவோம்.

உலகக் கோடீஸ்வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள்

நியூயார்க்: அம்பானி சகோதரர்கள், அசிம் பிரேம்ஜி, என்.ஆர். நாராயண மூர்த்தி ஆகியோர் போர்பஸ் இதழின் பட்டியலில் வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் வரிசையில் உள்ளனர். இவர் களையும் உள்ளடக்கி உலகக் கோடீஸ் வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று போர்பஸ் குறிப்பிட்டுள்ளது.

போர்பஸ் பட்டியலில் இடம் பெற் றுள்ள 1,226 கோடீஸ்வரர்களில் மெக்சி கோ நாட்டைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறைத் தொழிலதிபர் கார் லோஸ் ஸ்லிம் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 69 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் கார்லோஸ் தொடர்ந்து 3 வருடங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 61 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவ்வரிசையில் மூன்றாவ தாக வாரன் பஃப்பெட் இடம் பெற்றுள் ளார். அவருடைய சொத்து மதிப்பு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

கடந்த வருடம் இருந்த கோடீஸ் வரர்களின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று போர்பஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை 57 ஆகும். இந்தியர்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பவர் ரிலை யன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம் பானி ஆவார். அவருடைய சொத்து மதிப்பு 22.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த ஆண்டு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்த போதி லும் 54 வயதான முகேஷ் அம்பானி பட்டி யலில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

போராட்டம் தீவிரமாகும்! தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை


பேச்சுவார்த்தைக்கு பிரதமர் அழைக்க வேண்டும் போராட்டம் தீவிரமாகும்!

தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை
புதுதில்லி, பிப். 29- அகிலஇந்திய வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்த தொழிலாளர் கள்-ஊழியர்களுக்கு மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர். கோரிக்கைகளை ஏற் காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று தலைவர் கள் எச்சரித்துள்ளனர். மத்திய தொழிற்சங்கங் களின் தலைவர்கள் புத னன்று புதுதில்லியில் செய் தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறிய தாவது:-பிப்ரவரி 28 செவ்வா யன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்த தொழிலாளர் கள், ஊழியர்கள் அனைவ ருக்கும் மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்துக்கொள் கிறோம்.இதுவரை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் செவ்வாயன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் மிகவும் பரவலான அளவில் நடை பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நடை பெற்ற வேலைநிறுத்தம் இது.தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பு டைய கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு, ஒப்பந்தத் தொழிலா ளர் முறைக்கு எதிர்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைக்கப்பட் டன. இந்த கோரிக்கைகள் அரசியல் சார்புடையது அல்ல. மாறாக தொழிலாளர் களின் வாழ்வுரிமை தொடர் புடையது. அதனால்தான் தொழிலாளர்கள் பரந்து பட்ட அளவில் இந்த வேலைநிறுத்தத்தில் பங் கேற்றுள்ளனர்.தனியார்மயம் நாட்டு நலனுக்கு தீங்கு பயக்கும் என்பதாலேயே அதை எதிர்க்கிறோம். லாபம் ஈட் டக்கூடிய அரசு பொதுத் துறை நிறுவனப்பங்குகளை தனியாருக்கு விற்பதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது. நாட் டின் சுயசார்போடு தொடர் புடைய பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியு றுத்தி இந்த வேலைநிறுத் தம் நடைபெற்றுள்ளது.தற்போது நடைமுறையி லுள்ள போனஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ளன. இந்த சட்டத்தின்படி அதிக பட்சமாக ரூ.8 ஆயிரத்து 400தான் போனஸ் பெற முடியும். பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்க ளில் கூட தொழிலாளர்க ளுக்கு சொற்பத்தொகை தான் போனசாக வழங்கப் படுகிறது. எனவேதான் போனஸ் உச்சவரம்பை நீக்கவேண்டும் என்று கோருகிறோம். கோரிக்கைகளின் நியா யத்தன்மை காரணமாகவே வேலைநிறுத்தம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. இது அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.இந்தப்போராட்டத் தின் போது, தொழிலாளர் களின் சர்வீஸ் துண்டிக்கப் படும் என்றும், பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநில அரசுகள் மிரட்டின. ஆனால் அதையும் மீறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பெருவாரியாக பங்கேற்றுள்ளனர். பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தொழிற்சங்கங் கள் ஒன்றுபட்ட இயக்கத் தின் மூலம் அதை எதிர்த் துப்போராடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். மாநில அரசுகளின் மிரட்டல் மட்டுமின்றி பல் வேறு இடங்களில் காவல் துறை மற்றும் குண்டர்கள் போராடிய தொழிலாளர் கள் மீது தாக் குதல் தொடுத் துள்ளனர். ஆயிரக்கணக்கா னோர் கைது செய்யப்பட் டுள்ளனர். மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஹரியா னா, சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களில் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாயன்று இரவு 9 மணிக்கு வேதாந்தா நிறுவன தொழிலாளர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதில் மூன்று தொழிலாளர்கள் படுகாயம டைந்துள்ளனர். இத்தகைய அடக்குமுறை நடவடிக்கை களை தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கின் றன. நாடு தழுவிய கண்டன இயக்கங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்பு கிறோம்.தொழிலாளர்களின் போராட்ட உரிமையை ஒரு போதும் விட்டுத்தர இய லாது என தலைவர்கள் கூறினர். கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு பல மாதங் கள் கடந்த பின்னும், தொழிற்சங்கத் தலைவர் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட் டங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் ஆகியவற் றின் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் அறிவிக் கப்பட்டது.இந்த கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் முன்வரவேண்டும். இதற் காக சில நாட்கள் காத்திருப் போம். நியாயமான தீர்வுக்கு அரசு முன்வராவிட்டால், போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் என்று தலை வர்கள் கூறினர். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, சிஐடியு தலைவர்கள் ஏ.கே. பத்மநாபன், தபன்சென் எம்.பி., பிஎம்எஸ் தலைவர் பி.என்.ராய், ஏஐடியுசி தலை வர் குருதாஸ் தாஸ் குப்தா, எச்எம்எஸ் தலைவர் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.