நாட்கள் எண்ணப்படுவதால் அரசுக்கு பீதி சிஏஜி அறிக்கை குறித்த கருத்தரங்கில் சாடல்




சென்னை. செப்,11-“மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் நாட்கள் எண்ணப்படுகின் றன. எனவே தான் தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) மீது பிரதமர் உள்பட மத்திய அமைச் சர்கள் பாய்கிறார்கள் ’’ என்று முது பெரும்நாடாளுமன்றவாதி இரா.செழியன் கூறினார்.சென்னையில் திங்களன்று (செப்.10) அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்கு ஊழியர் சங்கத் தின் சார்பில், ‘‘ நாடாளுமன்ற ஜன நாயகத்தில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் பங்கு’’ என்ற தலைப்பில் கருத்தரங் கம் நடைபெற்றது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு களைவெளிச்சத்திற்குகொண்டு வந்துள்ளதால் தலைமை கணக்கு தணிக்கையாளரை பகிரங்கமாக ஆட்சியாளர்கள் தாக்கத் துவங்கியிருக்கிறார் கள். இதன் பின்னணியில் இந்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் செழியன் பேசியது வருமாறு:சிஏஜி என்பது அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட பதவி. அரசின் பட்ஜெட் செலவு கள் சரியாக செய்யப்படுகிறதா என்பதை தணிக்கை செய்யும் அமைப்பாகும். சிஏஜி அறிக்கை ஒன்றை தருகிறார் என்றால் அது நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட பின்னர் அர சின் அதிகாரபூர்வ ஆவணமாக மாறிவிடுகிறது.
அந்த அறிக்கை மீது பொது கணக்கு குழுவில் (பிஏசி) விவாதம் நடைபெற்று உண்மையிலேயே தவறுகள் நடைபெற்று இருந்தால் அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த சிஏஜி அறிக்கை பொது கணக்கு குழுவில் விவாதிக் கும் முன்னரே பிரதமர் அது பற்றி பேசுவதும் குழுவில் விவா தத்திற்கு வருவதற்கு முன்பே பதிலடி கொடுப்போம் என்ப தும் புதியதாக உள்ளது.1952 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் சிஏஜி அறிக்கை மீது விமர்சனம் எழுந்த போது குறுக்கிட்டு பேசிய அப்போ தைய பிரதமர் நேரு, ‘‘ சிஏஜி யாக இருப்பவர் அரசுக்கு பொறுப் பாக இருக்கவேண்டிய தில்லை. அவர் சுதந்திரமாக அரசின் செயல்பாடுகளை விமர் சிக்கும் அதிகாரம் உடையவர். எனவே அவரது செயல்பாடு களை விமர்சனம் செய்ய வேண் டாம்’’ என்று காங்கிரஸ் உறுப் பினர்களை கேட்டுக்கொண் டார். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக உள்ளது.நான் பொது கணக்கு குழு வின் தலைவராக இருந்த போது சிஏஜி அளித்த 90 அறிக்கை களை அப்படியே ஏற்றுக்கொண் டேன்.பொதுகணக்கு குழுவின் தலைவராக மக்களை எதிர்க் கட்சித் தலைவரை தான் நிய மிக்கவேண்டும் என்று நாடாளு மன்ற ஜனநாயகத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதே அரசின் செயல்பாடுகளை கண்காணிக் கும் குழு என்பதால் தான். 1945ஆம் ஆண்டு தில்லியில் சிஏஜி அலுவலகத்திற்கு அடிக் கல் நாட்டிப் பேசிய அப்போ தைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், “அரசு தற் போது எண்ணற்ற நலத்திட்டங் களை நிறைவேற்றி வருகிறது. எனவே செலவிடப்படும் ஒவ் வொறு பைசாவுக்கும் சரியான கணக்கு தேவைப்படுகிறது. தலைமை கணக்கு தணிக்கை யாளர் எதற்கும் அஞ்சாமல் யாருக்கு ஆதரவாக செயல்ப டாமல் தனதுபணியை மேற் கொள்ளவேண்டும்’’ என்று கூறினார்.அதேபோல் சென்னை யில் 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிஏஜி அலுவலக அடிக் கல் நாட்டு விழாவில் பேசிய அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன், ‘‘இந்தியா ஒரு ஏழை நாடு. வளங்களும் குறைவாக உள் ளன. எனவே அரசின் செயல் பாடுகளை கண்காணிக்க வேண்டியது தணிக்கைதுறை யின் மிக முக்கிய பணியாகும்.
எனவே உயர் மட்டத்தில் உள்ள வர்கள் செய்யும் தவறுகளை மறைத்துவிடாதீர்கள். யாருக் கும் எதற்கும் அஞ்சாமல் செயல்படவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். தற்போது உள்ள குடியரசு தலைவரும் குடியரசு துணைத் தலைவரும் அப்படி சொல்வார் களா? ஏற்கனவே நிதியமைச் சராக இருந்தவர்தான் தற் போது குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவரது செயல்பாடுகளை பொறுத்தி ருந்து தான் பார்க்கவேண்டும். ஜெர்மனியில் இட்லர் அதிகாரத் திற்கு வந்த பிறகு நாஜி கட் சியை தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தான். பின்னர் அரசாங்கத் தில் இருந்த அனைத்து கணக்கு தணிக்கை அமைப்பையும் ஒழித்துக்கட்டினான். இந்த முறையைத் தான் இந்தியாவில் ஏற்படுத்த மன்மோகன் சிங் கும் அவரது அமைச்சரவை சகாக்களும் முயல்கிறார்கள். எனென்றால் நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கும் வரை இவர்கள் அனைத் திற்கும் பதில் செல்லவேண்டி யுள்ளது அல்லவா? இவ்வாறு செழியன் பேசி னார்.
ஆவணங்களே அடிப்படை
முன்னாள் முதன்மை கணக்கு தணிக்கை இயக்குநர் ஜெனரல் ரெங்காச்சாரி பேசுகை யில், “சிஏஜி அறிக்கை புனையப் பட்டது என்கிறார்கள். அதீத கற்பனை என்கிறார்கள். சிஏஜி என்பவர் தன்னிச்சையாக செயல்படுபவரல்ல. அரசாங் கத்தில் இருந்து பெறப்படும் ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் தான் அறிக் கையை தயார் செய்கிறார். எனவே அவர் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. பட்ஜெட் செலவுகள் குறித்த புள்ளி விவ ரங்களை திரட்டி அதன் அடிப் படையில் தான் தணிக்கை பணி நடைபெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வசூல் செய் யப்படாத கடன்களை வாராக் கடன் (என்பிஏ) என்பார்கள். இது முன்பு மோசமான கடன் என்று அழைக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகளையும் கணக்கு தணிக்கைக்கு உட்படுத்தி னால் இதில் உள்ள தவறுக ளும் வெளியே வரத்துவங்கும். ஏனென்றால் அந்த பணம் அனைத்தும் மக்கள் பணம் என்றும் அவர் கூறினார்.தமிழ்நாடு மின்சார ஒழங்கு முறை ஆணையத்தின் உறுப் பினரும் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரியுமான எஸ். நாகல்சாமி பேசுகையில், “மக்களுக்கு உண்மையி லேயே சேவை செய்யவேண் டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசும் தணிக்கை அதிகாரியை பார்த்து அஞ்சாது’’ என்றார். “நிலக்கரி சுரங்கங்களை தனி யாருக்கு ஏலமுறையில் அல்லா மல் ஒதுக்கியதால் அரசுக்கு 1லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏன்று சிஏஜி கூறிய வுடன் எதிர்ப்பு கிளம்புவது இது புதிதல்ல. ஏற்கனவே போபர்ஸ் ஊழல் வெளிவந்த போதும் இப்படித்தான் எதிர்த் தார்கள்’’ என்று கூறினார்.பூமிக்கு கீழே உள்ள அனைத்து தாதுவளங்களும் அரசுக்குத் தான்சொந்தமானவை. இயற்கை எரிவாயுவை கொண்டு குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பதால் அதை தனியார் நிறுவனங்க ளுக்கு ஒதுக்கும் போது மாநில மின்சார வாரியங்களுக்கு ஒதுக் கீடு செய்தால் குறைந்த செல வில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய அரசி டம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் அந்த எரிவாயுவை கொண்டு அரசுமின்வாரியத்தால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2 முதல் ரூ2.50க்கு விற்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனம் அதே எரிவாயுவை கொண்டு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6 முதல் ரூ.6.50 வரை அரசுக்கு விற்றது. எனவே தாது வளங் கள் அனைத்தையும் அரசாங் கமே கையாள வேண்டும் என் றார் அவர்.கணக்கு தணிக்கை அதி காரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மோகன் பேசுகை யில், “பூமிக்கு கீழே உள்ள தாதுவளங்களை கணக்கிடு வதில் இந்திய புவியியல் அமைப்பினர் பழையமுறையை கையாளுகிறார்கள். சர்வதேச அளவில் சீராக கணக்கிடும் முறை தற்போது ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளது. அதை தான் கணக்கு தணிக்கை துறையின ரும் கடைப்பிடித்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை கண்டுபிடித்துள்ள னர். இதில் சிஏஜிக்கு உள்நோக் கம் ஏதும் இல்லை. அரசு சொத்து கொள்ளை போவ தைத் தான் அவர் அரசுக்கு சுட் டிக்காட்டியுள்ளார்’’ என்றார்.அகில இந்திய கணக்கு தணிக்கை சங்கத்தின் தலை வர் எம்.துரைப்பாண்டியன், தாராளமயம், தனியார் மயம், உலகமயம், இவற்றோடு ஊழல் மயமும் தற்போது சேர்ந்துள் ளது என்றார். புதிய பொருளாதார கொள்கையை தொழிற்சங்கங் கள் ஏன் எதிர்த்தன என்பதை நாடு இன்று நேரில் கண்டு வரு கிறது என்றும் தனியார் மயத் தால் ஊழல் தான் பெருகியுள் ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சங்க நிர்வாகி எம்.பி. உத யன் வரவேற்றார்.ரமேஷ் நன்றி கூறினார்.
தீர்மானம்
சிஏஜியை காங்கிரஸ் கட்சி யினரும் மத்திய அமைச்சர்க ளும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை கண்டித்தும் இதில் குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி தலையிட்டு அர சுக்கு அறிவுரைகூறவேண் டும் என்றும் கருத்தரங்கின் முடிவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நன்றி: தீக்கதிர்