தொடரும் விபத்துகள்-

தொடரும் விபத்துகள்

புதுதில்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியாகியுள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ரயில் பயணம் குறித்த ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இந்த விபத்து அமைந்துள்ளது.தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே எஸ்.11 பெட்டியில் திடீரென தீப் பிடித்துள்ளது. அதிகாலை நேரத்தில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால் தப்பிக்க முடியாமல் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் பலியாகியுள்ளனர். கழிவறை அருகே ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் முழுமையான, நேர்மையான விசார ணை நடத்தப்பட்டால் தான் உண்மை நிலை யை கண்டறிய முடியும். இந்த விபத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அனைத்து கோட்ட பொது மேலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப் படும் என்றும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில் வேத் துறை அறிவித்துள்ளது. வழக்கம் போல் விபத்து குறித்து ஆராய குழு ஒன்றும் அமைக் கப்பட்டுள்ளது. நிவாரணநிதி அறிவிப்பது, விசாரணைக் குழு அமைப்பது போன்ற அறிவிப்புகள் விபத் துக்கள் நடக்கும்போது நடைபெறும் சடங்கு களாக மாறிவிட்டன.
ஏற்கனவே இத்தகைய கொடூர விபத்துக்கள் நடைபெற்ற போது அமைக் கப்பட்ட விசாரணைக்குழுக்கள் கண்டறிந்த உண்மை என்ன? அந்தக்குழுக்கள் அளித்த பரிந் துரைகள் என்ன? அதனடிப்படையில் மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறை எடுத்த நடவடிக் கைகள் என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது. 2008ம் ஆண்டு ஆந்திராவில் கவுதம் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியில் தீப்பற்றிக் கொண் டதில் 20 பேர் உயிரிழந்தனர். ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற வாக் குறுதி கானல்நீராகவே உள்ளது.உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவன மான இந்திய ரயில்வேயை நம்பி கோடிக் கணக்கான பயணிகள் உள்ளனர். ஆனால் ரயில்வேத்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ரயில்வே அமைச் சர்களாக பொறுப்பேற்றபிறகு, இந்தத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் துரிதப் பட்டுள்ளதோடு, பயணிகளின் பாதுகாப்பு முற் றாக புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டுகளில் பயணிகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்பது அபாயகரமான அளவில் குறைக்கப்பட்டு வந்து ள்ளது. ரயில்வே பயணிகள் பாதுகாப்புக்கு முன் னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் விபத் துகளை தவிர்ப்பதற்கு முழு அளவிலான நட வடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நன்றி : தீக்கதிர் தலையங்கம் தட் 31.07.12